மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 23 சீன நிறுவனங்களை ஜோ பைடன் நிர்வாகம், அமெரிக்க வர்த்தக நிறுவன தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பொருளாதார தடுப்புப்பட்டியலில் 23 சீன நிறுவனங்களை யு.எஸ். வணிகத் துறை சேர்த்துள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் விமர்சித்துள்ளது.
இந் நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள சீனாவின் வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில்,
சீன நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் சேர்ப்பது “சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளின் கடுமையான மீறல்” மற்றும் சீன நிறுவனங்களை “நியாயமற்ற முறையில் அடக்கும் செயற்பாடு” என்று கூறியுள்ளது.
இதேநேரம் சீனா “சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது