பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (10) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய், கொரோனா திரைமறைவில் எங்களை வதைக்காதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளைத் தொடங்கு, உணவுப் பொருள்கள் – எரிபொருள்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்!, மற்றும் நிறுத்து நிறுத்து விலை உயர்வை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சிறிலங்கா காவல்துறையினரின் தலையீட்டையடுத்து போராட்டம் நிறைவடைந்தது.