பாரிஸிலும் தொற்று அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகளை ஆராய எலிஸேயில் திங்களன்று சந்திப்பு!

0
713

பாரிஸ் உட்பட 11 பிராந்தியங்களில் ‘டெல்ரா’ வைரஸ் திரிபின் பரவல்
அதிகரித்துள்ளது. நாளாந்தத் தொற்றுக்
களில் நாற்பது வீதமாக அது உயர்ந்துள்
ளது. இதனால் நாட்டில் நான்காவது தொற்றலை வேகமாகத் தோன்றும் ஆபத்துக் காணப்படுகிறது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அரசாங்கப் பேச்சா
ளர் கப்ரியேல் அட்டால் இத்தகவல்களை
செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

புதிய வைரஸ் காரணமாக உருவாகி உள்ள நிலைவரத்தை ஆராய்வதற்காக சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டம் அதிபர் மக்ரோன் தலைமையில் எதிர் வரும் திங்கட்கிழமை எலிஸே மாளிகை யில் கூட்டப்படவுள்ளது என்றும் அவர் அறிவித்தார். எத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் எதனையும் அரச பேச்சாளர் வெளியிடவில்லை. ஆனால் சுகாதாரப்
பணியாளர்களுக்குத் தடுப்பூசியைக் கட்
டாயமாக்குதல் மற்றும் கோடை
விடுமுறைக் காலத்தில் கடைப்பிடிக்க
வேண்டிய கட்டுப்பாடுகள், அயல் நாடுகளுடனான எல்லைகளை இறுக்கு
தல் போன்ற விடயங்கள் கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்ப
டுகிறது.

எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி நாட்
டின் சுதந்திர தினத்துக்கு முன்னராக
அதிபர் மக்ரோன் நாட்டு மக்களுக்கான
உரை ஒன்றை வழங்கக் கூடும் என்று
எலிஸே மாளிகை வட்டாரங்களை ஆதா
ரம் காட்டி BFM தொலைக் காட்சி தகவல்
வெளியிட்டுள்ளது.

வேகமாகப் பரவுகின்ற டெல்ரா வைரஸ்
தொற்றுக்கள் இவ்வாறு அதிகரித்துச்
சென்றால் ஜூலை – ஓகஸ்ட் மாதகாலப்
பகுதியை உள்ளடக்கிய கோடை விடுமு
றையைக் குழப்பக் கூடிய நான்காவது
வைரஸ் அலை தோன்றக் கூடும் என்று
அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய மரபு மாற்ற வடிவங்களான டெல்ரா, எப்சிலன் மற்றும் லாம்ப்டா வைரஸ் திரிபுகள் ஜரோப்பா
எங்கும் பரவிவரும் நிலையில்
ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற
நாடுகளில் ஊரடங்கு போன்ற கட்டுப்
பாடுகள் மீளவும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.
08-07-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here