அபிவிருத்திக் கண்களுக்குத் தெரியாமற்போன நடராஜானந்தா வித்தியாலயம்!

0
173

rambaikulamயுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானத்திற்காகவும் வடக்கின் துரித அபிவிருத்திக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தத்தின் பயன்கள் சரியாக மக்களைச் சென்றடையவில்லை.

வவுனியா – ஓமந்தை பகுதியில் ஏ 9 வீதியருகில் அமைந்துள்ளது இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலயம்.

யுத்தத்தின் காரணமாக மூடப்பட்ட இந்த பாடசாலை, மக்களின் மீள்குடியேற்றத்தையடுத்து மீண்டும் இயங்க ஆரம்பித்தது.

பாடசாலைக்கு என நிரந்தரக் கட்டடம் இன்மையால் மக்களின் வேண்டுகோளுக்கு அமைய சிறு கொட்டகையில் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

பாடசாலை இயங்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பாடசாலையில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வளங்கள் இன்மையால் மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.

தற்போது 22 மாணவர்களுடன் பாடசாலை இயங்கிவருகின்றது.

அதிபர் மற்றும் ஒரு ஆசிரியர் மாத்திரமே கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலயம் வடக்கின் வசந்தத்தின் அபிவிருத்திக் கண்களுக்கு தெரியாமற்போனது எவ்வாறு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here