புத்தளம் – மன்னார் வீதியில் நேற்று செவ் வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பலியான தோடு 11 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
புத்தளம் உளுக்காப்பள்ளத்திலிருந்து இலவங்குளம் ஊடாக மன்னாரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக வாகனமொன்று தடம்புரண்டதிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடமேல் மற்றும் வடக்கை பிரிக்கும் கல்லாறு பாலத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் மன்னார் பெரியமடு பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எச்.ரசீத், எம்.ஜவ்பர், ஏ.ஆர். சுகைல் (ஆசிரியர்) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த வாகனத்தில் சென்ற மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்த 10 பேரில் ஆசிரியை ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களும் மன்னார் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.