தமிழ் கலாச்சார இணையம் பிரான்ஸ் அமைப்பினரின் உதவியில் கொரோனா இடர்கால நிவாரணப் பணிகள் 02.07.2021 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மணிபரம் (கெழுத்துமடு) கிராமத்தில் மிகவும் வறுமை நிலையில் வாழுகின்ற 34 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த உதவியை வழங்கிய பிரான்ஸ் கலாச்சார இணையம் அமைப்பினருக்கு மணிபரம் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.