கிழக்கில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தலையீடு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி !

0
559

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்வது குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிப்படாத விதத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் இதன் காரணமாக குழப்பநிலை ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிற்கும் இதனை தெரியப்படுத்தியுள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிழக்குமாகாண பிரநிதிகள் படையினர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிலும் தலையிடுகின்றனர் என தெரிவித்துள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அவர்கள் எங்கள் சகாக்களின் செயற்பாடுகளில் பலவழிகளில் தலையிடுகின்றனர்,என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் இரண்டு விடயங்கள் குறித்து கரிசனையடைந்துள்ளோம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடு மற்றையது மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்கள் போன்றவற்றிற்குள் அனுமதியின்றி அவர்கள் நுழைவது எனவும் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயர்மட்டத்தில் உள்ளவர்களின் உத்தரவின் பேரில் தொற்றுநோயியல் பிரிவுஇராணுவத்தினரிற்கு தடுப்பூசிகளை வழங்குகின்றது அவர்கள் நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தெஹியத்தை கண்டி பகுதியில் சுகாதார அதிகாரிகளின் உதவியை பெறாமல் ஆடை தொழிலாளர்களிற்கு இராணுவம் தடுப்பூசியை வழங்கியது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் தடுப்பூசியை பெற்றவர்களில் பத்துவீதமானவர்கள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடுப்புமருந்துகள் உள்ளநிலையில் பாதுகாப்பு படையினரின்நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.டுகின்றனர் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்வது குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிப்படாத விதத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் இதன் காரணமாக குழப்பநிலை ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிற்கும் இதனை தெரியப்படுத்தியுள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிழக்குமாகாண பிரநிதிகள் படையினர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிலும் தலையிடுகின்றனர் என தெரிவித்துள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அவர்கள் எங்கள் சகாக்களின் செயற்பாடுகளில் பலவழிகளில் தலையிடுகின்றனர்,என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் இரண்டு விடயங்கள் குறித்து கரிசனையடைந்துள்ளோம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடு மற்றையது மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்கள் போன்றவற்றிற்குள் அனுமதியின்றி அவர்கள் நுழைவது எனவும் செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உயர்மட்டத்தில் உள்ளவர்களின் உத்தரவின் பேரில் தொற்றுநோயியல் பிரிவுஇராணுவத்தினரிற்கு தடுப்பூசிகளை வழங்குகின்றது அவர்கள் நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தெஹியத்தை கண்டி பகுதியில் சுகாதார அதிகாரிகளின் உதவியை பெறாமல் ஆடை தொழிலாளர்களிற்கு இராணுவம் தடுப்பூசியை வழங்கியது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் தடுப்பூசியை பெற்றவர்களில் பத்துவீதமானவர்கள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தடுப்புமருந்துகள் உள்ளநிலையில் பாதுகாப்பு படையினரின்நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here