பிரான்சிடம் இருந்து அல்ஜீரியா விடுதலைப் பெற்றது !

0
416

ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடு அல்ஜீரியா. பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் இது இருந்தது. 1945-ம் ஆண்டு மே 8-ந்தேதி அல்ஜீரிய மக்கள் வீதிகளில் இறங்கி பிரெஞ்சு அரசுக்கு எதிராக போரட்டத்தை துவங்கினார். இதைத்தொடர்ந்து கலவரஙகள் ஏற்பட்டன. இதில் 6 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது.

ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடு அல்ஜீரியா. பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் இது இருந்தது.

(FILES) In this file photo taken on July 2, 2020 Karim Tabbou, one of the most prominent figure of “Hirak”, is greeted upon his release from prison outside the Kolea Prison near the city of Tipasa, west of the capital Algiers. – A leading Algerian opposition activist has been detained and is to appear before a prosecutor on April 29, 2021, weeks ahead of elections he and other opponents have pledged to boycott. Karim Tabbou, a key figure in demonstrations that forced longtime president Abdelaziz Bouteflika to resign in 2019, was handed a one-year suspended sentence last year for “undermining state security”. (Photo by RYAD KRAMDI / AFP)

1945-ம் ஆண்டு மே 8-ந்தேதி அல்ஜீரிய மக்கள் வீதிகளில் இறங்கி பிரெஞ்சு அரசுக்கு எதிராக போரட்டத்தை துவங்கினார். இதைத்தொடர்ந்து  கலவரஙகள் ஏற்பட்டன. இதில் 6 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது.

இதனால் பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அல்ஜீரிய இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது என உறுதியெடுத்துக் கொண்டனர்.

1-11-1954 அன்று தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் போரைத் தொடங்கியது. 1956-ம் ஆண்டும் செப்டம்பர் 30-ல், 3 பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன் அலுவலகமும் ஒன்று.

1957 வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி விடுதலைக்காக போராடிய எப்.எல்.என். அமைப்பு பிரெஞ்ச் அரசாங்கத்தை அலற வைத்தது.

இதனிடையே எப்.எல்.என்.-ன்  வன்முறை நடவடிக்கைகளுக்கு மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என அல்ஜீரிய மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் எப்.எல்.என். ஒரு முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஜி.பி.ஆர்.ஏ. (Provisional Government of the Algerian Republic) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பிற்கு அரபு நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் ஆதரவு அளித்தன. எப்.எல்.என்.- ன் தலைவரான அப்பாஸ்தான் இதற்கும் தலைவராக அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த அமைப்பை இயக்கி வந்தார். இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இதன்படி அல்ஜீரிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்றும், மக்கள் விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும் டிக்காலே உறுதி கூறினார். இதற்கு சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். அதன்படி 1962 ஜூலை 1-ல் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன் மக்கள்தொகையில் மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர்.

ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here