பிரான்ஸில் நடைபெற்று முடிந்த பிராந்திய சபைகளுக்கான (Les élections régionales) தேர்தலில் அடித்த வலது சாரி
ஆதரவு அலை அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள அதிபர் தேர்தலின் கள நிலைவ
ரங்களை மாற்றி அமைக்கும் என எதிர்வு
கூறப்படுகிறது.
அதிபர் மக்ரோனுக்கும் மரின் லூ பென் னுக்கும் மட்டுமான பலப்பரீட்சை என்று
கணிக்கப்பட்ட எலிஸே மாளிகைக்கான போட்டியில் இப்போது மூன்றாவது புதிய சக்தியாக வலது சாரி கன்சர்வேட்டிவ்
பிரமுகர் சேவியர் பெர்ட்ரான்ட் (Xavier Bertrand) உள் நுழைகிறார்.
முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்கோஷி யின் ரிப்பப்ளிக்கன் கட்சிப் பிரமுகரான
சேவியர், நாட்டின் பெரிய பிராந்தியங்க
ளில் ஒன்றாகிய Hauts-de-France பிராந்தி
யத்தின் தலைவராக 2015 இல் தெரிவாகி
இருந்தார். இந்த முறை தேர்தலிலும் அவர் தனக்கு அடுத்த படியாகக் களத்தில்
நின்ற மரின் லூ பென் கட்சியின் வேட்
பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்று
ள்ளார். தனது சொந்தப் பிராந்தியத் தேர்தலில் வென்றால் அடுத்த கட்டமாக எலிஸே மாளிகைக்கான பந்தையத்தில் இறங்குவார் என்பதை வாக்களிப்புக்கு
முன்னராகவே சேவியர் பெர்ட்ரான்ட்
பகிரங்கமாக அறிவித்திருந்தார். வெற் றிக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர் , அடுத்த கட்டமாக தேசியஅளவில் மக்களைச் சந்திப்பதற்குத் தயாராகிறார் என்பதைக் கோடிகாட்டியுள்ளார்.
தங்களது அதிபர் வேட்பாளர் யார் என்பதை ரிப்பப்ளிக்கன் கட்சி வரும் நவம்பர் மாதம் அறிவிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 13 பிராந்தியங்களில்
ரிப்பப்ளிக்கன் கட்சி ஆட்சியில் இருந்த சகல பிராந்தியங்களையும் அது மீளக்
கைப்பற்றி உள்ளது.அதனால் ஏற்பட் டிருக்கின்ற உத்வேகம் அந்தக் கட்சியை மீண்டும் மைய அரசியல் அரங்கில் தூக்கி நிமிர்த்தி விட்டுள்ளது.
2017 இல் நடந்த அதிபர் தேர்தலின் போது
நாட்டின் பாரம்பரிய கட்சிகளான ரிப்பப்ளிக்கன் மற்றும் சோசலிஸக் கட்சி
கள் இரண்டின் சார்பிலும் கவர்ச்சிகர
மான தலைவர்கள் எவரும் களத்தில்
தோன்றியிருக்கவில்லை. மையவாதி
யாகத் தன்னைக் காட்டிக் கொண்ட மக்
ரோன் அச்சமயம் வெற்றியைத் தனதாக் கிக் கொள்வதற்கு அது வாய்ப்பாகியது.
ஆனால் இந்த தடவை கள நிலைவரம்
அதிபர் மக்ரோனுக்கு அவர் எதிர்பார்க்
கின்ற அளவுக்கு வாய்ப்பாக அமையாது
என்பதை பிராந்தியத் தேர்தல் பெறுபேறு
கள் காட்டி உள்ளன. மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கை என்றாலும் பாரம்ப
ரிய கட்சிகள் இரண்டுமே தத்தமது பிராந்தியங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. மரின் லூ பென் கட்சிக்கு ஒரு பிராந்தியம் கூடக் கிடைக் கவில்லை. மக்ரோனின் கட்சியின் நிலையும் அதுவே.
ஆளும் கட்சியின் படுதோல்வியை அடுத்து அதிபர் மக்ரோன் தனது பிரதம
ரையும் அமைச்சரவையையும் மாற்றி
அமைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. ஆனால் பிரதமர் ஜீன் காஸ்ரோவை அடுத்துவரும் மாதங்களு
க்குள் பதவி நீக்கப்போவதில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
(படம் :56 வயதான சேவியர் பெர்ட்ரான்டும் அவரது துணைவியும்)
குமாரதாஸன். பாரிஸ்.
28-06-2021