தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி ஈபிடிபி உறுப்பினர் மூவரால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று மதியம் 2 மணியளவில் வடமராட்சி கிழக்கு கொடுக்கிளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொடுக்கிளாய் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உந்துருளியில் வீடு திரும்பியபோது மூவர் அடங்கிய ஈபிடிபி உறுப்பினர்கள் அவரை தள்ளிவிட்டு பனை மட்டையால் தாக்கியுள்ளதுடன் கல்லினாலும் தலையை இலக்குவைத்து தாக்க முற்பட்டுள்ளனர்.
சற்குணேஸ்வரர் எதிர்த்து போராடிய நிலையில் அவரது முகத்தின் நாடி பகுதியில் கல்லால் குத்தி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது அவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.