வெலிக்கடை மற்றும் மஹர சிறைகளில் உள்ள கைதிகள் மூன்றாவது நாளாக சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று கைவிடப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறை செய்தித் தொடர்பாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவித்ததை அடுத்து இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.