ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பும் கடிதங்கள் தவிர்ந்த அனைத்து பொதிகளுக்கும், ஐரோப்பிய ஒன்றிய (EU) வரிக் கொள்கை பின்பற்றப்படுமென, தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார்.
ஜூலை 01 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் பெறுமதி சேர் வரி (VAT) திருத்தம் அமுலாவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 150 யூரோ பெறுமதிக்குட்பட்ட அனைத்து பொதிகளுக்கும், உரிய ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு பொதி உரிமையாளரினால் நேரடியாக அதற்கான VAT வரியை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
150 யூரோவிற்கு அதிக பெறுமதி கொண்ட பொருட்களுக்கு, உரிய VAT வரிக்கு மேலதிகமாக, உரிய நாட்டிற்கான சுங்க வரிக் கொள்கை பின்பற்றப்படும் என்பதால், அதற்கான வரி குறித்த பொருளை பெறுபவரிடமிருந்து அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.