சிறைச்சாலைகளில் உள்ள மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கோத்தாவின் பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதைப் போன்று தங்களுக்கும் விடுதலை வழங்கவேண்டுமெனவும் அல்லது மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரி இவ்வாறு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,
கொலைக்குற்றத்துக்குள்ளாகி மரண தண்டனை பெற்று வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
‘தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறை மதிப்புக்கு உட்படுத்துகிறது.