இந்திய சுகாதார அதிகாரிகளும் மருத்துவர்களும் டெல்ரா வைரஸ் திரிபின் மற்றொரு மாறுபாடு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான
உயிரிழப்புகளுக்குக் காரணமான
டெல்ரா வைரஸ் மேலும் மாற்றமடைந்து
வீரியம் மிக்க புதிய வடிவத்தில் பரவத் தொடங்கியுள்ளது என்று அவர்கள் சந்தே
கிக்கின்றனர்.
புதிய வடிவத்தை Delta Plus என்று இந்திய
ஊடகங்கள் பெயர் குறிப்பிட்டுள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய “டெல்ரா பிளஸ்” தொற்றுக்கு ஆளாகிய
வர்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்ற 21
பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தொற்று மாதிரிகள் மேலதிக
பகுப்பாய்வுகளுக்காக அனுப்பிவைக்கப்
பட்டுள்ளன என்று மாநிலத்தின் சுகாதார
அமைச்சர் ராஜேஷ் ரோப் (Rajesh Tope)
நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.
மனித நோய்க்காப்பு சக்தியிடமிருந்து தப்பிவிடக்கூடியது என்று நம்பப்படுகி
ன்ற “டெல்ரா பிளஸ்” திரிபு தீவிரமானது
என்று கருதும் நிலைமை இன்னமும்
உருவாகவில்லை என்றாலும் அது குறி
த்து இந்திய அறிவியலாளர்கள் உஷார் அடைந்துள்ளனர்.
2019 இல் முதன்முதலில் சீனாவில் கண்
டறியப்பட்ட “கோவிட் 19” எனப்படும் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த
ஒரு திரிபின் பெயரே டெல்ரா ஆகும்.
இந்தியாவில் மிக மோசமான இரண்டா
வது தொற்றலைக்குக் காரணமாகிய
டெல்ரா வைரஸ் உலகில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
ஆபத்தான அந்தத் திரிபின் அடுத்த கட்ட
வளர்ச்சியே “டெல்ரா பிளஸ்” என்று
அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் டெல்ரா பிளஸ் வைரஸ்
கடந்த மார்ச் மாதம் அடையாளம் காணப்பட்டது என்று மத்திய அரசு கடந்த
வாரம் அறிவித்திருந்தது. அண்மையில் இந்திய “டெல்ரா பிளஸ்” வைரஸை “நேபாள வைரஸ்” என்று இங்கிலாந்து ஊடகங்கள் சில குறிப்பிட்டிருந்தன.
ஆனால் நோபாளத்தில் கொரோனா வைரஸின் புதிய மாறுதல்கள் எதுவும்
காணப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
குமாரதாஸன். பாரிஸ்.
22-06-2021