இலங்கையில் சிங்கமொன்றுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதால், காய்ச்சல், சளி போன்ற கொவிட் நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகியிருத்தல் உசிதமென பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் தொற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், வைரஸ் தொற்றுடன் உள்ளவர்கள் பூனை இனத்தைச் சேர்ந்த பிராணிகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். இத்தகைய வகையைச் சேர்ந்த செல்லப்பிராணிகளை நெருங்கும் பட்சத்தில், அந்தப் பிராணிகளுக்கும் தொற்று ஏற்படலாம் என பேராசிரியர் தெரிவித்தார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொவிட் தொற்றிய சிங்கத்துக்கான பரிசோதனைகள் பற்றி பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே குறித்த பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார்.