தமிழர் விளையாட்டு விழா 2015 – சூரிச், சுவிஸ்!

0
411

சுவிஸ் தமிழர் இல்லம் 14 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் 9ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது.
31

சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த விளையாட்டு விழாவில் வழமைபோல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன் களமிறங்குகின்றன.
110

ஆண்கள்இ பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு முதலான குழு விளையாட்டுக்களும், இளையோருக்கான தடகளப்போட்டிகளும் இடம்பெறவிருக்கின்றன. இவற்றுடன் கயிறு இழுத்தல்இ குறிபார்த்துச்சுடுதல்இ சங்கீதக்கதிரை என்பனவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கண் கட்டி அடித்தல்இ தலையணை அடிச்சமர் போன்றனவும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளன.
112

உதைபந்தாட்ட இறுதிப்போட்டி சனியன்று இரவு பிரதான மைதானத்தில்மின்னொளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெறும் அணிகளுக்கு பெறுமதி வாய்ந்த வெற்றிக்கிண்ணங்கள் , பதக்கங்கள் என்பன வழங்கப்படவிருக்கின்றன.
122

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களை விளையாட்டுத்துறையில் மேம்பாடடையச் செய்வதோடுஇ அவர்கள் மத்தியில் தாயகம் குறித்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே தமிழர் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
132

வழமையை விட இவ்வருடம் மிக அதிக அணிகள் பங்கேற்க முன்வந்திருக்கின்றன என்றும் – இது புலத்திலுள்ள தமிழ் இளையோர் மத்தியில் விளையாட்டுத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருப்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் – ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

161

171

211

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here