டெல்ராவின் பிடியில் மொஸ்கோ: ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்!

0
262

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்றுக் காலை வெளியாகிய தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பதாயிரத்து 120 பேர்
வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருக்கின்
றனர். நாடுமுழுவதும் பதிவாகிய தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கையில் இது அரைவாசிக்கும் அதிக மாகும்.

இந்தியாவில் முதலில் காணப்பட்ட
டெல்ரா திரிபு வைரஸின் தொற்றுக்கள்
ரஷ்யாவில் அதிகரித்து வருகிறது. தலைநகர் மொஸ்கோவில் கடந்த
இரண்டு வாரங்களுக்கு முன்பாக மூவாயிரமாகக் காணப்பட்ட தொற்றுக்
கள் கடந்த இரண்டு தினங்களில் ஒன்பது
ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.நாடு
மூன்றாவது வைரஸ் அலையை எதிர்
கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மொஸ்கோவில் புதிய சுகாதாரக் கட்டுப்
பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த
திங்களன்று சென்.பீற்றர்ஸ்பேர்கில்
(Saint Petersburg) உதைபந்தாட்ட ரசிகர்கள் கூடும் இடங்களில் உணவு விற்பனை தடைசெய்யப்பட்டது.

புதிய தொற்றுக்களில் 90 வீதமானவை ‘டெல்ரா’ வைரஸ் மூலம் ஏற்பட்டிருப்பதாக நகரமேயர் செர்ஜி செபாய்னின் (Sergei Sobyanin) தெரிவித்திருக்கிறார்.

கடந்த குளிர்காலத்தில் மோசமான தொற்று
நிலைவரத்தைத் தாண்டி ஓரளவு வழமை
நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த
மொஸ்கோவில் மருத்துவமனைகளில்
மீண்டும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
மேலதிக படுக்கை வசதிகள் செய்யப் பட்டுவருகின்றன. அங்கு அரசுப்பணியா
ளர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்
டுள்ளது. 12 மில்லியன் சனத்தொகை
கொண்ட மொஸ்கோவில் 1.5 மில்லியன் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றி யுள்ளனர்.

இதேவேளை – இங்கிலாந்தில் புதியதோர்
அலைக்கான தொற்றுக்கள் இடம்பெற்று
வருகின்றன என்பதை நாட்டின் தடுப்பூசி
மற்றும் நோய்யெதிர்ப்புக்கான கூட்டுக்
குழுவின் பேராசிரியர் அடம் ஃபின்(Prof Adam Finn) உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை கடந்த ஜனவரியில்
எதிர்கொண்டது போன்ற ஆஸ்பத்திரி
அழுத்தங்கள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தொற்றுநோயியலாளர்கள் நம்புகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
20-06-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here