பிரான்ஸில் இடி மின்னல் புயல் தாக்கம்: தேவாலயக் கூரை பறந்தது!!

0
395

கடும் வெப்பத்தை அடுத்து தோன்றும் இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பாரிஸ் பிராந்தியம் உட்பட
51 மாவட்டங்கள் இன்றிரவு செம்மஞ்சள்
(vigilance orange) எச்சரிக்கைக் குறியீட்டில் உள்ளன. நூற்றுக் கணக்கான மின்னல்
தாக்குதல்கள் பதிவாகி உள்ளன.

பாரிஸின் பூங்காக்கள், பொழுதுபோக்கு
இடங்கள், இடுகாடுகள் என்பன பொது
மக்களுக்கு மூடப்பட்டுள்ளன என்று நகர
சபை அறிவித்துள்ளது.இல்-து-பிரான்
ஸின் Essonne மாவட்டத்தின் மேற்குப்
பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
RER C, D, E ரயில் சேவைகளிலும் இன்று
மாலை தடங்கல்கள் ஏற்பட்டன.

நாட்டின் மேற்கு மத்திய மாவட்டமான Indre-et-Loire பகுதியில் கிராமம் ஒன்றில்
இடிமின்னலுடன் மினி சூறாவளி தாக்
கியதில் தேவாலயம் ஒன்றின் மணிக்
கோபுரக் கூம்புப் பகுதி பிய்த்தெறியப்பட்
டது. அதன் இடிபாடுகள் வீழ்ந்ததால்
வாகனங்கள் சில சேதமடைந்தன. எவருக்
கும் காயம் ஏற்படவில்லை. அருகே அமைந்திருந்த கிராம மண்டபத்தின்
கூரையையும் புயல் காற்று பெயர்த்துள்
ளது. அங்கு நாளைய தேர்தல் வாக்குப் பதிவுக்கான ஆயத்தப்பணிகள் நடை பெற்றுக்கொண்டிருந்தன.அதிர்ஷ்ட வசமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லை.

Indre-et-Loire மாவட்டத்தின் வைன் தோட்டப் பிரதேசமாகிய Saint- Nicolas-de-Bourgueil பகுதியில் மற்
றொரு தேவாலயம் ஒன்றும் நாற்பதுக்கு
மேற்பட்ட வீடுகளும் புயலினால் சேதமடைந்துள்ளன. கண்காணிப்பு ஹெலிக்கொப்ரர்கள் மூலம் சேதங்கள்
மதிப்பிடப்பட்டுவருகின்றன. மின்
விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயல் மழை சமயங்களில் கடைப்பிடிக்க
வேண்டிய விழிப்பு அறிவுறுத்தல்களை பாரிஸ் நகர நிர்வாகம் வெளியிட்டுள் ளது.

🌳மரங்களின் கீழ் பாதுகாப்பு தேடவேண்
டாம்.காடுகளில் நடப்பதை தவிர்க்கவும்.

📵வீடுகளுக்கு வெளியே கைத் தொலைபேசி, மற்றும் டிஜிட்டல் சாதனங்
களைப் பாவிப்பதைத் தவிர்க்கவும்.

⚡தரைகளில் வீழ்ந்து கிடக்கக் கூடிய
மின்சார வயர்களைத் தொட வேண்டாம்.

🔥எங்காவது தீப்பற்றுவதைக் கண்டால்
உடனடியாகத் தீயணைப்பு சேவைக்கு
அறிவிக்கவும்.

👣இயன்றவரை வெளியே செல்வதை, வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

(படம் : சேதமடைந்த தேவாலயம். நன்றி : La Nouvelle République)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here