யாழ்.மிருசுவில் பகுதியில் தொடருந்து பாதையில் தண்டவாளங்களை பற்றியிருந்த இரும்பு கிளிப்புகளை திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 14ம், 15ம் திகதிகளில் தொடருந்து பாதையில் தண்டவாளங்களை பற்றியிருந்த இரும்பு கிளிப்புகள் திருடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல்துறையினர் திருடப்பட்ட இரும்பு கிளிப்புகளை வைத்திருந்த நபர் ஒருவரை யாழ்.ஐந்துசந்தி பகுதியில் கைது செய்திருந்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளின் அடிப்படையில் யாழ்.அரியாலையை சேர்ந்த 25 வயதிற்குட்பட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.