நெடுந்தீவு தெற்குக் கடல் பகுதியில் சாமிப்பிட்டிகு;கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் (ஜீன் 18) கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் 08ற்கு மேற்பட்ட கடல் ஆமைகள் புங்குடுதீவு நடுத்துருத்தி கடற்கரையில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக கொழும்பு துறைமுகத்தில் எரிந்த கப்பலின் பாதிப்பு தென்னிலங்கைக்கு மட்டுமன்றி தீவகத்திற்கும் ஏற்பட்டுள்ளதோ என்கின்ற அச்சம் மக்கள் மனங்களில் எழுந்துவருகின்றது.