புங்குடுதீவு நடுவுத்துருத்திப் பகுதியில் 08ற்கு மேற்பட்ட கடலாமைகள் கரையொதியிங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கரையொதிங்கிய ஆமைகள் கிராம அலுவலகர் மற்றும் சுகாதார பரிசோதகரின் ஆலோசனைப்படி சுகாதார முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.
அத்துடன் காயப்பட்ட கடல் ஆமை ஒன்று கடற்படையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ உதவி செய்து மீளவும் கடலில் விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, யாழ்.ஊர்காவல்துறை கடற்கரையில் இறந்த திமிங்கிலம் ஒன்று நேற்றுக் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
கொழும்புத் துறைமுகத்தில் எரிந்த கப்பலின் பாதிப்பு தென்னிலங்கைக்கு மட்டுமன்றி தீவகத்திற்கும் ஏற்பட்டுள்ளதோ என்கின்ற அச்சம் தற்போது மக்களுக்கு எழுந்துள்ளது.