யாழில் மிதியுந்தில் சென்றவர் திடீரென மயங்கி வீழ்ந்து மரணம்!

0
134

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று காலை புத்தூர் – நிலாவரை வீதி வழியாக சென்று கொண்டிருந்த வேளையே 40 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் மிதி வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார்.

அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக்க சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here