இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கைவிடப்பட்ட பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரி நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை தமிழக இராமேஸ்வர மீனவர்கள் முன்னெடுத்தனர்.
மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் மீள் பாவனைக்கு எடுக்க முடியாத கைவிடப்பட்ட பேருந்துகளை இலங்கையின் வடபகுதி ஆழ்கடல் பகுதியில் இறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும், இந்த செயற்பாட்டின் காரணமாக தமது வலைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு படகுகளும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை தடுக்குமாறு கோரியே நேற்று (16) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இராமேஸ்வரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.தேவதாஸ் தெரிவித்துள்ளார்.