சிறுப்பிட்டி நீர்வேலிப் பகுதியில் தென்னை மரத்திலிருந்து தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பிடுங்க முயன்ற வேளையில் அவர் பிடித்திருந்த மட்டையில் இருந்து கைவிடுபட்டதைத் தொடர்ந்து கீழே வீழ்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு உடனடியாக யாழ். போதனா வைத்திசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.
மேலும் இவருடைய மரண விசாரணை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி ந. பிறேம்குமாரால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.