தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில், கொரோனா பெருந்தொற்று வன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில், நீலா என்ற பெண் சிங்கம் கொரோனாவுக்கு பலியானது. இதையடுத்து, வனத்துறை சார்பில், முதுமலை, டாப்சிலிப், சத்தியமங்கலம், களக்காடு உள்ளிட்ட புலிகள் காப்பகங்களிலுள்ள முகாம் யானைகளுக்கு கால்நடை மருத்துவ குழு சார்பில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் டாப்சிலிப்பில் நடக்கும் யானைகளுக்கான மாதிரி பரிசோதனையை பார்வையிட்டார்.
அங்கு வனத்துறை அமைச்சர் உரையாற்றுகையில்,…
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் கொரோனா தொற்றுக்கு பலியானது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் புலிகள் காப்பகங்களில் உள்ள முகாம் யானைகளின் சளி, ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, முதுமலையில் 28 யானைகள், டாப்சிலிப்பில் 28 யானைகளுக்கு முதற்கட்ட மாதிரி பரிசோதனை நடத்தப்படும். மாதிரிகளை போபாலில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது என்றார்.