“சர்வதேச விசாரணை மூலமே தீர்வு சாத்தியம்” : மாவை.சேனா­தி­ராஜா!

0
122

mavai-senathirajah575-01சர்­வ­தேச விசா­ரணை மூலமே தமிழ்த்­தே­சிய இனத்தின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். எமக்கு உள்­ளக விசா­ர­ணையில் நம்­பிக்­கை­யில்­லை என்று இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட
முதன்மை வேட்­பா­ள­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்­தார்.
இது­தொ­டர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யினால் நிறை­வேற்­றப்­பட்ட சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் தாக்கல் செய்­யப்­படும். அதை­யொட்­டியே போர்க்­குற்ற விசா­ரணை தொடரும் அப்­படி தொடரும் என்­பதால் தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.
ஐ.நா.மனித உரிமை பேர­வை­யிடம் தொடர்ந்தும் சர்­வ­தேச விசா­ரணை வேண்டும் என்றே கோரு­கிறோம். இறுதி யுத்­தத்தின் போதும் அதற்குப் பின்­ன­ரான காலத்­திலும் நடந்­தே­றிய படு­கொ­லைகள், அநீ­திகள் தொடர்பில் உண்­மைகள் வெளி­வ­ர­வேண்டும்.
போர்க்­குற்றம் நடந்­த­தற்­கான கார­ணங்களை அறி­வதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான பொறி­முறை உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தியம் ஏற்படும். ஏற்­க­னவே இவ்­வி­டயம் மனித உரிமைப் பேர­வையின் அறிக்­கையில் சொல்­லப்­பட்­டுள்­ளது.
ஆனால் கடந்த கால அர­சாங்கம் ஐ.நா.விசா­ரணை இடம்­பெற ஒத்­து­ழைப்பையோ அனு­ம­தி­யையோ வழங்க மறுத்­து­வந்­தது. இந்­நி­லையில் வரப்­போகும் அரசு இதற்கு அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்­வ­தேச விசாரணை முழுமையாக நிறைவேற்றப்படாது விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here