நெடுந்தீவிலும் வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

0
337

இலங்கையில் தற்போது கொறோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் தங்களுக்கான உயரிய பாதுகாப்பு மற்றும் தங்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் குறிப்பிட்ட மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி இன்றைய தினம் (மே -11) நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையிலும் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். காலை 08.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை பணிப்புறக்கணிப்பு நெடுந்தீவிலும் இடம் பெற்றது.

இதன் காரணமாக இன்றைய தினம் காலையில் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here