மஹிந்தவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனுதாக்கல்: தேர்தல் முடியும்வரை வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைக்க வேண்டும்!

0
95

Mahinda_rajapaksa_பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பைக் குறைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேறு வேட்பாளர்களுக்கு இல்லாத சிறப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதால் ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எனவே தேர்தல் முடிவுறும் வரை மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் குறைக்க வேண்டும் என்று கூறியே இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு ஆளணி எண்ணிக் கையைவிட அதிக அளவு பாதுகாப்பு ஆளணியும் சிறப்புரிமைகளும் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் குறைக்கவில்லை யானால் ஏனைய வேட்பாளர்களும் அதற்கு சமமான பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் கேட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியாக மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை முழுமையாக நீக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது. அதேநேரம், அரசாங்க செலவில் நிர்வகிக்கப்படும் மற்றும் கொடுப்பனவுகளைப் பெரும் சொத்துக்கள் பாதுகாப்பு அதிகாரிகளை மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறும் தேர்தல் ஆணையாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என மனுமூலம் கேட்கப்பட்டிருந்தது.

மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி தேர்தலில் களமிறங்கியதால் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கு பாரிய அநீதி மட்டுமல்ல தடை ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவசமசமாஜக் கட்சியின் தேசிய பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தரணி ஆர்.எச்.சேனக்க பெரேரா இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல்கள் ஆணையாளர், மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எமது நாட்டிலுள்ள ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படுகின்ற பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை விடவும் விஞ்சிய அளவில் மஹிந்தவுக்கு பாது காப்பு படையினரின் பாதுகாப்பும், சிறப்புரிமைகளும் கிடைக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பது தமக்குத் தெரியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

103 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 14 இராணுவத்தினர் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு கிடைக்கிறது. தேர்தலில் போட்டி யிடும் வேறு எந்தவொரு வேட்பாள ருக்கும் இந்தளவு பாதுகாப்பு கிடைப் பதில்லை என்றும் அதில் தெரிவித் துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here