சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட அடக்குமுறைக்கொதிராகவும் தரப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து தமிழ் மாணவர்களினதும் இளையோர்களினதும் தாயகச்சிந்தனைக்கான வழிகாட்டியாக இருந்த பொன்.சிவகுமாரன் அவர்களின் 47வது நினைவு நாள் டுசில்டோப் நகரில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்டது.
பொதுச்சுடரை அருட்தந்தை அல்பேட் கோலனும் ஈகைச்சுடரை செல்வன் சுகன்யனும் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். அதைத்தொடர்ந்து உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு வருகை தந்த அனைவரும் மலர்,சுடர் வணக்கம் செலுத்தினர்.
தமிழ் இளையோர் அமைப்பு மாணவர்களின் பேச்சும் கவிதையும் பாடலும் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து அருட்தந்தை அல்பேட் கோலன் உரையாற்றினார். அவர் எமது உரிமையை இங்கும் கேட்பதற்கு பின் நிற்க கூடாது அதற்காக இளைஞர்கள் இந்த நாட்டு அரசியலை தெரிந்திருப்பது அவசியம் என தெரிவித்தார். இறுதியில் தமிழீழ விடுதலையை காணும் வரை தலைமுறை கடந்தாலும் தளராது போராடுவோம் எனும் உறுதியுடன் தாரக மந்திரத்தை கூறி நிகழ்வு நிறைவுபெற்றது.