மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கம் – கஜேந்திரகுமார்!

0
142

gajendrakumarஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரிடம் கொடுக்கப்படும் நிலையில் மஹிந்த அந்த அதிகாரங்களை மீண்டும் பயன்படுத்தும் நிலை காணப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே, இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பெரிய மாற்றம் கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கையை கொடுத்து தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளித்து இருந்தது.

இன்று ஜனாதிபதிக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் படிப்படியாக அகற்றி பிரதமரிடம் பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்படும் நிலையில் ஆட்சியில் இருந்து அகற்றின மஹிந்த ராஜபஷே பாராளுமன்றத்திற்கு வந்து ஜனாதிபதியனால் பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்படும் அதிகாரங்களை பயன்படுத்த கூடிய நிலையில் இருக்கின்றார்

இந்த ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகளை கொடுத்து இருக்கிறது என்பதனை அவர்கள் யோசிக்க தொடங்க வேண்டும்.

நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும் என்பதனால் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு, அன்று தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கி இருந்தது.

மக்கள் விரும்பாத கருத்தை நாங்கள் தெரிவிக்கின்றோம் என்றால் அதில் ஆழ்ந்த கருத்து இருக்கு என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

தேர்தல் அரசியலுக்காக வாக்கு எடுப்பதற்கு செயற்படும் தரப்பு நாங்கள் அல்ல என்ற அந்த நம்பிகையை மக்கள் எம் மீது வைத்தால் வர கூடிய காலத்தில் நாங்கள் கூறுகின்ற ஆலோசனைகளை கேட்டு செயற்பட்டால் எம்மை பொறுத்தவரை நாம் பெரியளவில் முன்னேற்றம் அடைவோம்.

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் ஏமாற்றப்பட்டது போல மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட கூடாது என்பதே எமது நோக்கம்.என தெரிவித்தார்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கம்.

மக்கள் மயபப்டுத்தப்பட்ட அரசியலை முன்னெடுத்து தமிழ் தேசத்திற்கான அங்கீகாரம் பெறுவதற்கான அரசியல் பாதைகளை இனம் காட்டுவது தான் எமது தேர்தல் விஞஞபனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தேசம் யுத்தத்தால் பாதிக்கபப்ட்ட பிரதேசமாக காணப்படுவதனால் மக்களுக்கு தேவைகள் அதிகமாக இருக்கின்றது தமிழ் மக்களை மையப்படுத்தி சொந்த மக்களின் நிதிபலத்தை நம்பி இருக்கின்ற அபிவிருத்திகளை இனம் காட்ட உள்ளோம்

எம்மை பொறுத்த வரை நடைமுறை அரச முற்றுமுழுதாக தக்க வைத்தது எமது சொந்த உறவுகளின் நிதி பலம். தான்

ஒரு ஆயுத போராட்டத்தை தக்க வைக்க கூடிய அளவு நிதியினை வழங்கி இருந்தவர்கள் அந்த போராட்டத்திற்கு வழங்கிய நிதியில் சிறு பகுதியை வழங்கினாலே பெரியளவிலான அபிவிருத்தியை பெற முடியும்

புலம் பெயர்ந்த தமிழ் மக்களில் தொண்ணூறு வீதமான மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். இந்த மண்ணிலே வாழும் மக்களும் எமக்கு அங்கீகாரம் அளித்தால் அந்த நம்பிக்கையுடன் புலம் பெயர் மக்களின் உதவிகளை பெற முடியும் என தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.கந்தர்மடப்பகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்த முறையும் ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னுமொரு ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ் மக்களுடைய வாக்கு பலத்தை பயன்படுத்த கூடாது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை.

உண்மையிலேயே மகிந்த ராஜபச்ஷவின் சித்தாந்தங்களை முற்றுமுழுதாக நிராகரித்து தமிழ் மக்களுக்கு நலன் கொடுக்கக் கூடிய வகையிலே ஒரு புதிய ஆட்சி வரப்போவதென்றால் எங்களுடைய ஆதரவினை முற்றுமுழுதாக் கொடுக்கலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ராஜபக்ஷவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேனவின் தலமையில் இருந்த அந்த கூட்டாட்சி முற்றுமுழுதாக ராஜபக்ஷவை விட தீவிரமாக தமிழ் மக்களுடைய விவகாரங்களில் சிங்கள தேசிய இனத்தின் நலன்கள் என்ற கோணத்தில் அனுகுவார்கள் என்ற வாக்குறுதியினை கொடுத்துத்தான் தென்னிலங்கையில் அந்த தரப்பு செயற்பட்டது.

ஆனால் இன்று கவலை என்னவென்றால் ஆட்சி மாற்றம் பெரிய மாற்றத்தினை கொடுக்கும் என்று நம்பிக்கை கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து, மிகப் பெரிய அளவில் அந்த ஆட்சிமாற்றத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்க செய்தும் இன்று ஆட்சியில் இருந்து துரத்தப்பட்ட மகிந்தவையே மைத்திரியின் புதிய ஆட்சி தன்னுடைய மிக முக்கியமான வேட்பாளராகக் கொண்டு வருகின்ற நிலமை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கினற ஜனாதிபதியின் அதிகாரங்களை மெல்ல மெல்ல குறைத்து அவற்றை பிரதமருக்கு கொடுக்கின்ற போக்கில் போய்கொண்டிருக்கின்ற நிலையிலே பாராளுமன்றத்திற்கு புதிதாக வந்த மகிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்து ஜனாதிபதியிடம் இருந்து பாராளுமன்றத்திற்கு கொடுக்கின்ற அதிகாரங்களை தான் பயன்படுத்தக் கூடிய நிலமை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிமாற்றம் எவ்வளவு நம்பிக்கை கொடுத்திருக்கின்றது என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

நாங்கள் உணர்ச்சிவசப்படாமல் வெறுமNனு பழிவாங்கல் என்ற கோணத்தில் சிந்தித்து செயற்படாமல் துரநோகத்தோடு செயற்பட வேண்டும் என்பதால்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

இன்றாவது மக்கள் இவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் பொறுப்போடுதான் நடந்து கொள்கின்றோம். வெறுமனே மக்கள் ஒரு நிலையில் இருக்கின்றதால் மக்கள் பழிவாங்க விரும்புகின்றதனால் மக்கள் ஏற்றுக் கொள்ளதாத கருத்தைக் கூறி எங்களை மக்கள் விமர்சிக்கின்ற தேவை எங்களுக்கு இல்லை.

ஆனால் மக்கள் விரும்பாத ஒரு கருத்தை நாங்கள் முன்வைக்கின்றோம் என்றால் அதற்கு ஒரு ஆழமான காரணம் இருக்கின்றது என்பதை மக்கள் உணர தொடங்க வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில் நாம் தேர்தலுக்கான வாக்குகளை பெறுவதற்கு செயற்படுகின்ற ஒரு தரப்பு இல்லை. மக்கள் நம்பிக்கை வைத்திருந்தால் இனிவரும் காலங்களில் நாங்கள் அவர்களுக்கு கூறகின்ற ஆலோசனைகளை சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய கூடிய நிலமை வரும்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏதிர்காலத்தில் ஏமாற்றப்படக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here