யாழில். பிறந்து ஒரு மாதத்துக்கு உள்ளிட்ட மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இணங் காணப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள பிறந்து 12 நாளே ஆனா குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறந்து 20 நாளே ஆனா குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும் , தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் யாழ்.போதனா மருத்துவமனையில் முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 29 நாளே ஆனா குழந்தை ஒன்றுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை இளவாலை பகுதியை சேர்ந்த 09 மாத குழந்தைக்கும் , மானிப்பாய் பகுதியை சேர்ந்த 10 மாத குழந்தைக்கும் பெற்றோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.