முதலாவது தற்கொடையாளர் தியாகி. பொன்.சிவகுமாரன் 47 ஆம் ஆண்டு நினைவு தினமான நேற்று சனிக்கிழமை முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
கொவிட் 19 தொற்றையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்ற நிகழ்வில் சிவாஜிலிங்கம் அவர்களினால் பொன்.சிவகுமாரன் அவர்களின் திருஉருவப்படத்திற் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.