தடுப்பூசி ஆவணப் பரிசோதனை: விமான நிலையங்களில் நீண்ட தாமதங்கள் வரலாம்!

0
154

பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றியவர்கள் விமானப் பயணங்களை மேற்கொள்ள
அனுமதிக்கப்படுவர். ஆனால் இரண்டா
வது ஊசி ஏற்றிய நாளில் இருந்து குறைந்தது இரு வாரங்கள் கடந்துள்
ளதா என்பது பரிசோதிக்கப்படலாம்.

வைரஸ் பரிசோதனைகள், தடுப்பூசிச் சான்றுச் சோதனைகள் காரணமாக விமான நிலையங்களில் இனிமேல் நீண்ட வரிசைகளும் தாமதங்களும் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளுக்குரிய வழமையான கடவுச் சீட்டு மற்றும் பயணப்பொதிகள் பரிசோ
தனைகளுக்கு மேலதிகமாக பிசிஆர்
வைரஸ் பரிசோதனை (PCR tests) அல்லது தடுப்பூசி ஏற்றிய சான்றுப் பரிசோதனை (vaccination checks) போன்றவற்றையும் செய்யவேண்டி இருப்பதால் விமான நிலையங்களில்
பெரும் நெரிசல்கள், தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கோடை விடுமுறைப் பயணங்களுக்கான
விமானப்பதிவுகள் தொடங்கியுள்ளன.
வரும் மாதங்களில் ஐரோப்பிய விமான
நிலையங்களுக்கு இடையே பெரும் எண்ணிக்கையான பயணிகள் பயணம்
செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் அமெரிக்காவினதும் உல்லாசப் பயணிகள் நாட்டுக்குள் வருகை தருவதை பிரான்ஸ் எதிர்வரும்
ஜூன் 9 ஆம் திகதி முதல் அனுமதிக்க
உள்ளது. தடுப்பூசி ஏற்றியுள்ள ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் கட்டுப்பாடுகள் இன்றி நாட்டுக்குள்
வரலாம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அனுமதிக்கப்பட்ட பைஸர், மொடோனா, அஸ்ராஸெனகா, ஜோன்சன் (Pfizer, Moderna, AstraZeneca Janssen) ஆகிய தடுப்பூசிகளை ஏற்றியவர்களுக்கே இந்த அனுமதி. விமான நிலையங்களில் வைரஸ் பரிசோதனை வசதிகளும்
இலவசமாக வழங்கப்படவுள்ளன.

அயல் நாடுகளுக்கு செல்ல முடியுமா?

பிரெஞ்சு மக்கள் ஜூன் 9முதல் தங்கள்
வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்க
முடியும். வெளிநாட்டு அமைச்சு உலக நாடுகளை அவற்றின் வைரஸ் பரவல் நிலைவரத்தின் அடிப்படையில் பச்சை, செம்மஞ்சள், சிவப்பு (green, orange, red) என்ற மூவர்ணங்களில் பிரித்து வரை படத்தை வெளியிட்டுள்ளது. (பார்க்க படம்). நிலைமைகளைப் பொறுத்து
வரைபடத்தில் மாற்றங்கள் செய்யப்படும்.

🟢பச்சை நாடுகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், (European Union, Andorra, Iceland, Liechtenstein, Monaco, Norway, San Marino, Holy See and Switzerland)
மற்றும் ஆஸ்திரேலியா, தென் கொரியா,
ஜப்பான், இஸ்ரேல், நியூசிலாந்து,லெப னான், சிங்கப்பூர் போன்றவை பச்சை வர்ண நாடுகள். இவை வைரஸ் தீவிர
மாகப் பரவாத மற்றும் புதிய திரிபுகளின்
ஆபத்து குறைந்த நாடுகளாகக் கணிக்
கப்படுகின்றன.

பூரணமாகத் தடுப்பூசி ஏற்றியதற்கான
சான்றிதழைக் காட்டி இந்த நாடுகளுக்கு
பயணிக்க முடியும். ஆனால் ஊசி போட்ட
உடனேயே பயணம் புறப்பட்டுவிட முடியா
மல் இருக்கும். ஊசியின் செயற்பாட்டுக்
காலத்தைக் கருத்திற் கொண்டு கடைசி ஊசி ஏற்றி இருவாரங்கள் கடந்த பிறகே
விமானம் ஏற முடியும். தடுப்பூசி சான்றை
டிஜிட்டல் மற்றும் காகித வடிவங்களில்
சமர்ப்பிக்கலாம்.

ஊசி ஏற்றாதவர்கள் 72 மணி நேரத்துக்கு
முன்னர் எடுக்கப்பட்ட வைரஸ் சோதனை
அறிக்கையைக் காட்டி விட்டு விமானத்
தில் ஏறலாம். பெற்றோருடன் செல்லும்
பிள்ளைகளுக்கும் அது பொருந்தும்.

பயணிக்கின்ற நாடுகளில் என்ன நடை
முறைகள் பின்பற்றப் படுகின்றனவோ
அங்கு அவற்றுக்கு நீங்கள் கட்டுப்படவே
ண்டியவர்களாக இருப்பீர்கள்.

🟡மஞ்சள் நாடுகள்

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த
மஞ்சள் பிரிவுக்குள்ளேயே இருக்கின்
றன. அங்கெல்லாம் கொரோனா வைரஸ பரவிக்கொண்டிருந்தாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் மரபு மாறிய திரிபுகள் பெருமளவில் பரவாத நாடுகளாகவும் கணிக்கப்படுகின்றன.

🔴சிவப்பு நாடுகள்

கோரோனா வைரஸும் அதன் திரிபு களும் மோசமாகப் பரவிக் கொண்டிருக் கின்ற நாடுகள் சிவப்பு வர்ணத்தில் உள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.
05-06-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here