அவசர இலக்கங்கள் செயலிழந்ததால் அம்புலன்ஸ் இன்றி மூவர் உயிரிழப்பு!

0
214

பிரான்ஸில் அவசர சேவைத் தொடர்பு இலக்கங்கள் பல மணிநேரம் செயலி
ழந்தமையால் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மூவர் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.Morbihan பகுதியில் மாரடைப்புக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். Réunion தீவில் வேறு இரண்டுபேர் திடீர் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் சேவைக்குப் பல முறை அழைப்பு எடுத்தபோதும் இணைப்புக் கிடைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

நாட்டின் மேற்குக் கரை மாவட்டமான
Morbihan பகுதியில் 63 வயதான
ஆண் ஒருவர் உயிரிழந்தார்.அவருக்கு
மாரடைப்பு ஏற்பட்டதும் அவரது மனைவி
அவசரமாக ‘சமு’ (Samu) அம்புலன்ஸ்
சேவைக்கு அழைப்பை ஏற்படுத்த முயன்
றார் என்றும் அது முடியாமற் போகவே
தனிப்பட்ட வாகனம் ஒன்றில் அவர் மருத்
துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு
அங்கு உயிரிழந்தார் எனவும் கூறப் படுகிறது. அவரது மரணம் தொடர்பாக நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Réunion தீவில் உயிரிழந்த இருவரது விவரங்க
ளும் வெளியாகவில்லை.

பொலீஸ், தீயணைப்பு, அவசர மருத்துவ
அம்புலன்ஸ் போன்றவற்றை அழைப்ப
தற்கான 15, 17,18,112 ஆகிய பொதுவான இலக்கங்கள் அனைத்தும் நேற்று மாலை முதல் செயலிழந்தன. அவசர சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மாற்றுத் தொலைபேசி இலக்கங்களை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக் கிறது. சில இடங்களில் சேவை இன்று பகல் வழமைக்குத் திரும்பியது என்பதை ஒரேஞ் தொலைபேசி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சேவைகள் துண்டிக்கப்பட்டதற்கான
காரணத்தை விளக்குவதற்காக ஒரேஞ்
தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இன்று
உள்துறை அமைச்சுக்கு அழைக்கப்
பட்டார்.அங்கு தனது கவலையை வெளி
யிட்ட அவர், சம்பவத்துக்காகப் பகிரங்க
மன்னிப்புக் கோரினார்.தொலைபேசி வலையமைப்பு துண்டிக்கப்பட்டமைக்கு
வெளியில் இருந்து நடத்தப்பட்ட சதி
எதுவும் காரணம் அல்ல என்பதை அவர்
உறுதிப்படுத்தினார்.

இதேவேளை –

அவசிய சேவை சீர்குலைவு காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய உயிரிழப்புகள் தொடர்பாக முழுக் கவனத்துடன் விசாரணைகள் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் உறுதி அளித்துள்ளார். உயிரிழப்புகள் உண்மையில் அவசர இலக்கங்களின் உதவி கிடைக்காத காரணத்தால் தான் ஏற்பட்டனவா என்பது உறுதிப்படுத்
தப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்
ளார்.

சுகாதார நெருக்கடிகள் நிறைந்த
அத்தியாவசியமான சமயத்தில் நிகழ்ந்த
இந்தச் சீர்குலைவு தொடர்பாக அதிபர் மக்ரோன் கவலை தெரிவித்துள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.
03-06-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here