கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது இழப்புக் குறித்து முகநூலில் வெளியாகிய பதிவு இது:-
சக்கர நாற்காலியில் எம் மண்ணில் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நாளாந்தம் பயணித்த ஓர் மகத்தான மக்கள் சேவையாளன்…
மாற்றுத்திறனாளிகளின் குரலாக அவர்களின் தேவைகளை உலகறிய செய்த தனி ஒருவன்…
நிம்மதியாக உறங்கு தம்பி!
“காந்தன் தான் ஆற்றிய அரும்பணிகளால் எம்முள் என்றும் நீக்கமற நிறைவான்”