சுவிசில் இடம்பெற்ற நடுகல் நாயகர்கள் நினைவான எழுச்சி வணக்க நிகழ்வு!

0
789

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 30.05.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில்; நினைவுகூரப்பட்டது.

இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன் எழுச்சிப்பாடலும், கவிவணக்கமும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடியதனைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வுகள்; நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here