நயினாதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்று அடையளப்படுத்தப்பட்ட இளைஞன் 15 பேரை அழைத்து கிரிக்கெட் விளையாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பீ.சீ.ஆர் பரிசோதனையின் பின்னர் இளைஞன் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் சுகாதாரத் துறையினருக்கு தெரியாமல் நண்பர்களை தொலைபேசி மூலம் அழைத்து இரவு நேர மின்னொளியில் கிரிக்கெற் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வெளியாகிய பீ.சீ.ஆர் பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் நடாத்தப்பட்ட விசாரணையில் இவ்விடயம் அறியப்பட்டது.
குறித்த நபருடன் தொடர்பில் இருந்த அத்தனை குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டது. நோய்த் தொற்றிலிருந்து முற்றாக விலகியதும் குறிப்பிட்ட நபருக்கும் கூடி விளையாடிய அத்தனை பேருக்கும் சட்டநடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.