வவுனியாவில் நூதன திருட்டு: தாலியை பறிகொடுத்த பெண் !

0
541

thaliவவு­னியா நொச்­சிக்­கு­ளத்தை சேர்ந்த பெண்­ம­ணி­யொ­ருவர் பணத்­திற்கு ஆசைப்­பட்டு தனது 7 பவுண் தாலிக்­கொ­டியை நேற்று முன்­தினம் திரு­டர்­க­ளிடம் பறி­கொ­டுத்த பரி­தாப சம்­ப­வ­மொன்று வவு­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.
மேற்­கு­றித்த சம்­பவம் குறித்து வவு­னியா பொலிஸார் தெரி­விக்­கையில்,

நாக­ரி­க­மாக உடை­ய­ணிந்த ஆணொ­ரு­வரும் பெண்­ணொ­ரு­வரும் நொச்­சிக்­கு­ளத்தை சேர்ந்த பெண்­ம­ணியை அணுகி தாங்கள் இரத்­தி­ன­பு­ரி­யி­லி­ருந்து வந்­தி­ருப்­ப­தா­கவும் தங்­க­ளிடம் இரத்­தி­னக்கல் ஒன்று இருப்­ப­தாக சிங்­களம் மற்றும் தமிழ் கலந்த கொச்சை தமிழில் பேசி­ய­துடன் இரத்­தி­னக்­கல்லின் பெறு­மதி 15 இலட்சம் ரூபா என தெரி­வித்­த­துடன் தாங்கள் வெளியூர் என்­பதால் தங்­களை கடைக்­காரர் நம்­ப­வில்லை அதனால் இந்த இரத்­தி­னக்­கல்லை விற்­றுத்­தந்தால் ஒரு இலட்சம் ரூபா தரு­வ­தாக தெரி­வித்­து­ள்­ளனர்.

இதனை ஏற்­றுக்­கொண்ட நொச்­சிக்­கு­ளத்தைச் சேர்ந்த பெண்­ணிடம் துணியில் சுற்றி கட்­டப்­பட்ட கல் ஒன்றை கொடுத்­துள்­ளனர்.
இதன்­போது அப்­பெண்­ம­ணி­யிடம் திரு­டர்கள் 15 இலட்சம் ரூபா இரத்­தி­னக்­கல்லை எடுத்துச் செல்லும் நீங்கள் நம்­பிக்­கைக்கு ஏதா­வது கொடுத்­து­விட்டுச் செல்­லுங்கள் என்று கூறி­ய­தற்கு இணங்க அப்­பெண்­மணி தாலியைக் கழற்றி கொடுத்­து­விட்டு சென்­றுள்ளார்.

கடையில் சென்று பார்த்­த­போது துணியில் சுற்­றப்­பட்டிருந்­தது ஒரு சிறிய கருங்கல் என தெரிய வந்­தி­ருந்­தது. ஏமாற்­றப்­பட்ட பெண்­மணி தாலிக்­கொ­டியை வாங்­கி­ய­வர்­களை தேடிய போது அவர்கள் மாய­மா­கி­யி­ருந்­தனர். பறி­கொ­டுத்த தாலியின் பெறுமதி சுமார் 3,50,000 என தெரிவிக்கப்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டையடுத்து வவு னியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Close

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here