வவுனியாவில் பல கிராம மக்கள் பட்டினியின் பிடியில்!

0
260

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக, வவுனியாவில் பல கிராமங்களில் வாழும் தினக்கூலியை அடிப்படையாகக் கொண்ட மக்கள் தொழில்வாய்ப்பின்றி குடும்பத்துடன் பட்டினியால் வாடுகின்றனர்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிதம்பரபுரம் கற்குளம் படிவம் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் விறகு வெட்டுதல், மேசன்வேலை, கூலிவேலைகளுக்கு சென்று அதன் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தில் குடும்பச் செலவை நகர்த்திச் செல்லும் மக்களாவர்.

தற்போதைய பயணத்தடை காரணமாக உணவின்றி பட்டினியால் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி தாம் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here