யாழ்ப்பாணம் பல்கலைகழக பணியாளர்கள் 2,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜீன் 2ஆம் திகதி புதன்கிழமை மற்றும் 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் யாழ்ப்பாணம் பல்கலைகழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
எனவே, அனைத்து பல்கலைகழக பணியாளர்களும் குறித்த இரு திகதிகளிலும், சமூகமளித்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பல்கலைகழக துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.