2005 ஆம் ஆண்டு இதே நாளில்… மே 30..
தமிழீழம், மல்லாவியில் ஓவியர் புகழேந்தி அவர்களின் “புயலின் நிறங்கள்” ஓவியக் காட்சி நடைபெற்றது.
அதன் சில நினைவுப் பதிவுகளை இன்று ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மூன்று வருட போர் ஓய்வில் கலைந்திருந்த உணர்வுகளைத் தட்டி எழுப்பி சிலிர்க்க வைத்துவிட்டார் ஓவியர் புகழேந்தி. வர்ணக்கலவையால், அடக்கி ஒடுக்கப்படும் மக்களை கிளர்த்தி அடக்குமுறையாளர்களை சிதைக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வோவியங்கள். நிறம் மாறாத உன் உணர்வுகள் எமக்கு விடிவைத்தேடும் வழியில் ஊன்றுகோலாக உள்ளது.
– க.முருகேசு.

இவ்வோவியங்களை தென் இலங்கைப் பக்கங்களில் கண்காட்சிக்கு வைத்து தமிழனின் உணர்வுகளை தெளிவுபடுத்தி சிங்கள மக்களும் பார்வையிடச் செய்ய வேண்டும்.
- மாணவிகள், மல்லாவி மத்தியக் கல்லூரி.