ஐதரசன் எரிசக்திப் பாவனையை அறிமுகப்படுத்தும் வகையிலும் அது
எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்ற
தாக்கங்களை எடுத்துக் காட்டுமுகமாக
வும் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி பாரிஸில் நடைபெற்று வருகிறது.
ஈபிள் கோபுரம் அமைந்திருக்கின்ற Champ-de-Mars பகுதியில் இடம்பெற்று
வருகின்ற அந்தக் கண்காட்சியின்
ஒரு பகுதியாக ஐதரசன் மூலம்
ஈபிள் கோபுரம் ஒளியூட்டப்பட்டுள்ளது.
பொது முடக்கம் காரணமாகப் பொது
மக்களது பார்வைக்கு மூடப்பட்டிருக்
கின்ற கோபுரம் கடந்த சில தினங்களாக
இரவு நேரத்தில் மின்சாரத்துக்குப்
பதிலாக ஹைட்ரஜன் மூலம் ஒளிர விடப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க ஐதரசன் (renewable hydrogen) மூலம் இயக்கப்படுகின்ற
எலக்ரோ ஐதரசன் மின் பிறப்பாக் கிகள் (electro hydrogen generator)ஊடாக மின்சாரம் பெறப்படுகிறது.அதன் மூலம் பெறப்பட்ட சக்தியைக் கொண்டு
லேஸர் ஒளி மூலம் ஈபிள் கோபுரம் ஒளிர விடப்பட்ட கட்சியையே படத்தில் காண்
கிறீர்கள். கொரோனா வைரஸ் அலைகள்
காரணமாக நீண்டகாலம் மூடப்பட்டிருக்
கின்ற ஈபிள் கோபுரம் எதிர்வரும் ஜூலை
16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வழியில்-
அடுத்த தலைமுறைக்கான – புதுப்பிக்கத் தக்க-ஐதரசன் (next-generation energy source — carbon-free renewable hydrogen) சார்ந்த தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துவதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. பிரான்ஸ் தனது ஹைட்ரஜன் தொழில்நுட்பத் துறைக்கு எட்டு பில்லியனுக்கும் அதிக நிதியை முதலிடவுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
29-05-2021