கோவிட் தொற்றுக் காரணமாக நேற்று உயிழந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் அவர்களுக்கு 2001/2002 பிரிவு கலைப்பீட மாணவர்கள் இறுதி கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதன்விவரம் வருமாறு:-
யாழ். பல்கலைக்கழகத்தில் எமது அணிக்கு {2001/2002} ஆங்கில பாடத்தைக் கற்பித்த விரிவுரையாளரான அரியாலையைச் சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்கள் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
2001/2002 அணி மாணவர்கள்
கலைப்பீடம்,
யாழ்.பல்கலைக்கழகம்.