மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் பெசன்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் இறுதி ஊர்வலம், அவரது இல்லத்தில் இருந்து துவங்கி பெசன்ட்நகர் மின் மயானத்தை அடைந்தது. ஏராளமான முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு இறுதியஞ்சலி செலுத்தினர்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் பெசன்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதையடுத்து சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த எம்.எஸ் விஸ்வநாதன் 1,200 படங்களுக்கு மேல் இசைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.