கொரோனா வைரஸ் எங்கிருந்து எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது குறித்து புதிய விசாரiணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்புகளிற்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கி அடுத்த 90 நாட்களிற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் கொரோனா வைரசின் தோற்றுவாய் – அது பாதிக்கப்பட்ட விலங்குடன் மனிதன் தொடர்புகொண்டதால் பரவியதா? வுகான் ஆய்வுகூடத்திற்கு தொடர்புள்ளதா போன்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பைடன் உத்தரவிட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் அந்த அறிக்கை கிடைத்துள்ளதை தொடர்ந்து பைடன் மேலதிக விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.இன்றுவரை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இரண்டு வகையான சாத்தியப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர் ஆனால் அவர்கள் நிச்சயமாக இதுதான் என எதனையும் தெரிவிக்கவில்லை என பைடன் குறிப்பிட்டுள்ளார்.புலனாய்வு பிரிவினரின் இரண்டு தரப்பினர் பாதிக்கப்பட்ட விலங்குடன் மனிதன் தொடர்புகொண்டதால் பரவியது என தெரிவிக்கின்ற அதேவேளை ஒரு தரப்பு ஆய்வுகூடத்திலிருந்தே பரவியது என கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் முடிவுகள் குறித்து குறைந்தளவு நம்பிக்கையை கொண்டுள்ளதுடன் தங்களிடம் போதியளவு விபரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளனர் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.