ராஜீவ் காந்தி கொலையாளிகளின் விவகாரம் – இப்போதே முடித்துவிடவேண்டும்!

0
296

கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30வது நினைவுதினம் அவரது கொலை வழக்கின் 7 குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்ட ஆயுள்கால சிறைத்தண்டனையை ரத்துச்செய்யவேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கைக்கு விசேட முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.பல்வேறு அரசாங்கங்கள் பல்வேறு வழிவகைகளினூடாகவும் காரணங்களை முன்வைத்தும் தண்டனை ரத்து கோரிக்கைையை தடுத்துவரும் நிலையில் சகல கைதிகளும் தமிழ்நாட்டில் சிறையில்  இவ்வளவு காலமும் வாடிவதங்கிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களது தண்டையை ரத்துச்செய்யுமாறு 2018 செப்டெம்பரில் தமிழ்நாடு மாநில அரசாங்கம் செய்த சிபாரிசை ஏற்றுக்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு இப்போது கடிதம் எழுதியிருக்கிறார்.

நளினி, அவரது கணவர் முருகன் மற்றும் பேரறிவாளன் உட்பட 7 பேரினதும் தண்டனை ரத்து மனு விசாரணை இவ்வருட முற்பகுதியில் இந்திய  உச்சநீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.இந்த விவகாரத்தில் தீர்மானமொன்றை எடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தரப்பில் பிரத்தியேகமான தாமதம் காணப்படுவதாக அப்போது உச்சநீதிமன்றம் கூறியது.தீர்மானமொன்றை எடுக்குமாறு 2018 ஆண்டில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கூறியது. மத்திய அரசாங்கமும் மாநில ஆளுநரும் தண்டனை ரத்து கோரிக்கையை நிராகரிப்பதற்கு புதிதுபுதிதாக இடையூறுகளைக் கண்டுபிடிப்பதன் மூலமாக சட்ட மற்றும் நடைமுறைரீதியான முட்டுக்கட்டைகளை போடுவதில் நாட்டம் காட்டிக்கொண்டே  வந்திருக்கிறார்கள்.

மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமும் ஆளுநரிடமுமே இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தீர்மானமொன்றை எடுக்கலாம் என்று 2015 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் கூறிவி்ட்டது.ஆனால், நம்பமுடியாததும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமான வாதங்களை முன்வைக்கப்பட்டு சட்டரீதியான இடையூறுகளை உருவாக்குவதற்கு மேலும் முயற்சிகள் உருவாக்கப்பட்டன.நான்கு நாட்களில் ஆளுநர் தீர்மானமொன்றை எடுப்பார் என்று மத்திய அரசாங்கம் ஜனவரியிலேயே உச்சநீதிமன்றத்துக்கு கூறியபோதிலும், ஆளுநர் இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவதையே விரும்பினார்.கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றே அண்ணா தி.மு.க. அரசாங்கமும் தி.மு.க.அரசாங்கமும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

 மாநில அரசாங்கத்தின் அமைச்சரவையின் சிபாரிசின் பேரிலேயே ஆளுநர் செயற்பட்டிருக்கவேண்டும்.ஆனால், அதற்குப் பதிலாக அவர் இந்த விவகாரத்தைக் கையாளுவதில் இருந்து நழுவினார். அதற்கு தண்டனை ரத்தை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை எனன்பதே பிரதான காரணமாக இருக்கவேண்டும்.இந்த விவகாரத்தில் ஆளுநரும் மத்திய அரசாங்கமும் தாமதிக்கும் தந்திரோபாயங்களையும் இடைஞ்சல்களை விளைவிக்கும் அணுகுமுறைகளையும் கடைப்பிடித்த குற்றப்பொறுப்புடையவையாகும்.ஜனாதிபதி முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று குற்றவாளிகளின் தண்டனையை ரத்துச் செய்ய உத்தரவிட்டிருக்கவேணடும்.மூன்று தசாப்தங்களாக அவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள்.இவர்களில் சிலருக்கு ராஜீவ் காந்தி கொலைச்சதியில் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியாது.அவர்களை ராஜீவ் காந்தியின் குடும்பம் மன்னித்து வழக்கை முடித்துவிடவேண்டுமென்று விரும்புகிறது.இந்த வழக்கில் நீதி ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது.சிறைவாசத்தை நீடிப்பது பெரிய அநீதியாகும்.சகல சட்ட முறைமைகளுமே நீதி வழங்குவதை நோக்கமாகக்கொண்டிருக்கவேண்டும்.அத்துடன் நீதி எப்போதுமே ஒரு மனித முகத்தை கொண்டிருக்கவேண்டும்.நீதி சீர்திருத்தத் தன்மையானதாக இருக்கவேணடுமே தவிர, பழிவாங்கும் தன்மையானதாக இருத்தலாகாது. கருணை கலந்ததாக இருக்கவேண்டும்.அத்தகைய சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வெறுமனே அரசாங்கம் மாத்திரமல்ல, சமுதாயமும் கூட மனிதாபிமான — தார்மீக அக்கறைகளும் கருணையும் இல்லாதவையாகவே காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here