மன்னாரில் சீரற்ற காலநிலையால் 16 குடும்பங்கள் பாதிப்பு; 13 வீடுகள் சேதம்!

0
316

மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் 13 வீடுகள் பௌதீக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 5 வீடுகளும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 5 வீடுகளும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 2 வீடுகளும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1 வீடும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டியில் 1 கடையும்,கொக்குப்படையான் கிராமத்தில் 1 கடையும் சேதமடைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசிச் செய்கையும், தேவன் பிட்டி,வெள்ளாங்குளம் பகுதியில் 5 ஏக்கர் வாழைத்தோட்டமும் குறித்த காற்றினால் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பல மீனவக் கிராமங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளதோடு, கடற்கரையில் கட்டி வைக்கப்பட்ட படகுகளும் நீரில் இலுத்தச் செல்லப்பட்டுள்ளதோடு, மீனவர்களின் மீன் வாடிகளும் சேதமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி:உதயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here