நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் வீசிய கடும் காற்றினால் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 600 பப்பாசிமரங்கள் முறிந்து வீழ்ந்து அழிவடைந்துள்ளன.
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவைச் சேந்தவர் துரைாசா தமிழ்ச்செல்வன் என்ற
29 வயதான இளம் விவசாயி. தனது தோட்டத்தில் இம் முறை 1000 ஆயிரம்
பப்பாசிகளை வைத்து பராமரித்து இதுவரை ஐந்து இலட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில்
. ஐந்து தடவைகள் மாத்திரமே பழங்களை விற்பனை செய்துள்ள நிலையில்
நேற்று(25) வீசிய கடும் காற்றுக் காரணமாக அவரது தோட்டத்தில் உள்ள 1000
பப்பாசிகளில் 600 இற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இதனால் பெரும் நட்டமடைந்த நிலையில் விரக்கத்தியில் காணப்படும் இவருக்கு
சுமார் 20 இலட்சம் வரை அழிவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அழிவு தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் “செயற்கையாலும் அழிவு இயற்கையாலும் அழிவு பப்பாசிப்பழம்
விற்பனைசெய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது இன்று வீசிய கடும் காற்றின் தாண்டவம், ஈடுசெய்யமுடியாத பேரிழப்பை உண்டாக்கியுள்ளது” என
பதிவிட்டுள்ளமை அவரது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா பயணத் தடை காரணமாக பப்பாசி பழங்களை விற்பனை செய்ய முடியாத
நிலையில் ஒவ்வொரு மரங்களிலும் அதிகமான பழங்கள் காணப்பட்டதாகவும் இதன்
காரணமாக மரங்கள் அதிக சுமையுடன் இருந்த நிலையில் நேற்று (25) வீசிய கடும்
காற்று அந்த மரங்களை முறித்து சாய்த்துள்ளது எனத் தெரிவிக்கின்றார்.
உற்பத்திச் செலவை கூட பெற்றுக்கொள்ள முன்னர் இப்படியொரு அழிவை தான்
எதிர்பார்க்கவில்லை எனவும் கவலையுடன் தெரிவித்துள்ளார் .