காரைநகர் ஜே-48 கிராம சேவையாளர் பிரிவில், ஆயிலி என்ற இடத்தில் உள்ள வீடொன்றின் மீது பனை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஏணைக்குள் உறங்கிக்கொன்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை காயமடைந்துள்ளது.
கிஸ்ணபிள்ளை ஹரிபாலன் என்பவரின் அரை நிரந்தர வீட்டின் மீதே பனைமரம் முறிந்து வீழ்ந்தது. காயமடைந்த இவரது குழந்தை சிகிச்சைக்காக சங்கானை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதே இடத்தில் பிறிதொரு பனை மரம் முறிந்து வீழ்ந்ததில் மதில் சேதடைந்துள்ளது.