நாட்டில் காணப்படும் கோவிட் தொற்று நோய் நிலைமையில் பிள்ளைகளின் மனநல சுகாதார நிலைமையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீட்டுக்குள் இருக்கும் இந்த நேரத்தில் அர்த்தமுள்ள காரியங்களுக்காக நேரத்தை ஒதுக்குமாறு அந்த சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் கைபேசிகளை தொடர்ந்தும் பயன்படுத்தாது பிள்ளைகளுடன் இணைந்து வீட்டுத் தோட்ட வேலைகள், விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய அர்த்தமுள்ள வேலைகளைப் பிள்ளைகளுடன் மேற்கொள்ள வேண்டும். – எனவும் அவர் கூறியுள்ளார்.